உலக செய்திகள்

அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் பிறந்த அபூர்வ குழந்தை

அமெரிக்க தாக்குதல் நினைவு தினத்தில் 9 பவுண்ட் 11 அவுன்ஸ் எடையில் அபூர்வ குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

அமெரிக்க ராணுவ தலைமையகம் வாஷிங்டன் பென்டகன் மீதும், நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டிடம் மீதும் பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாதிகள் விமானங்களை மோதி அதி பயங்கர தாக்குதல்களை நடத்தி 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர்.

2001-ம் ஆண்டு, 9-வது மாதமான செப்டம்பர் மாதம் 11-ந் தேதி நடந்த இந்த தாக்குதல்கள் உலக வரலாற்றின் கரும்புள்ளியாக அமைந்துள்ளன. கடந்த 11-ந் தேதி இந்த தாக்குதலின் 18-வது நினைவு தினம் அமெரிக்கா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது.

அந்த நாளில் டென்னிசி மாகாணம், ஜெர்மன்டவுன் நகரில் உள்ள மெத்தடிஸ்ட் ஆஸ்பத்திரியில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் கேமட்ரியோன் மூர் பிரவுன் என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் ஆகும்.

9-வது மாதத்தின் 11-வது நாளில் இரவு 9 மணி 11 நிமிடத்தில் பிறந்த குழந்தையின் எடை 9 பவுண்ட் 11 அவுன்ஸ் என்பது அபூர்வ நிகழ்வாக அங்கு பார்க்கப்படுகிறது.

இதுபற்றி கேமட்ரியோன் மூர் பிரவுன் கூறும்போது, பேரழிவு மற்றும் அழிவுகளுக்கு மத்தியில் எனது மகள் புதிய வாழ்வாக அமைந்திருக்கிறாள் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்த குழந்தைக்கு பெற்றோர் கிறிஸ்டினா என பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து