வாஷிங்டன்
அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெப் பெசோஸ் பதவி விலகியதை தொடர்ந்து புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஆண்டி ஜாஸே நியமிக்கப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தை தொடங்கிய ஜெப் பெசோஸ் அதனை உலகின் முன்னனி ஆன்லைன் வர்த்தக நிறுவனமாக மாற்றினார். 1.7 டிரில்லியன் டாலர் மதிப்பிலான அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 27 ஆண்டுகள் பதவி வகித்த ஜெப் பெசோஸ் ஜூலை ஐந்தாம் தேதி முதல் பதவி விலகுவதாக அண்மையில் அறிவித்திருந்தார்.
அந்தப் பதவிக்கு அமேசானின் இணையவழிச் சேவைகளுக்கு பொறுப்பாளராக இருந்த ஆண்டி ஜாஸே-வை ஜெப் பெசோஸ் நியமித்துள்ளார். 57 வயதாகும் ஜெப் பெசோஸ் இனி தனது செயற்கைகோள் தயாரிக்கும் நிறுவனமான புளூ ஒரிஜனில் கவனம் செலுத்த உள்ளார்.