பாங்காக்,
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஒன்று உள்ளன. இதில் இன்று காலை பயங்கர வெடி விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததார். 27 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகை காரணமாக அந்த பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.