கோப்புப்படம் 
உலக செய்திகள்

இத்தாலியில் கத்திக்குத்து: அர்செனல் கால்பந்து வீரர் உட்பட 5 பேர் காயம் - ஒருவர் பலி

அர்செனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட 5 பேர் மீது நடத்தப்பட்ட கத்திகுத்து தாக்குதலில் ஒருவர் பலியானார்.

மிலன்,

இத்தாலியில் மிலனின் புறநகரில் உள்ள அசாகோவில் உள்ள ஷாப்பிங் சென்டரில் கத்திக்குத்துத் தாக்குதலில் அர்செனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட 5 பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் 46 வயதான தாக்குதல் நடத்திய அந்த இத்தாலிய நபர், உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், தாக்குதலுக்குப் பிறகு உடனடியாக கைது செய்யப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில் காயமடைந்த ஸ்பெயின் கால்பந்து வீரர் பாப்லோ உள்பட 4 நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை