உலக செய்திகள்

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் ‘ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம்’ - பிரதமர் மோடி

கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பங்களிப்புகளை தான் எடுத்துரைத்தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

ரோம்,

இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வருகிறது. இத்தாலி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இம்மாநாட்டின் போது உலக நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

ஐ.நா. சபையில் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானாம் கேப்ரிஷியஸ், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கல், துருக்கி அதிபர் எர்டோகன் உள்பட பல தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.

இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பங்களிப்புகளை தான் எடுத்துரைத்தாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ஜி20-ன் இன்றைய நடவடிக்கைகள் விரிவான மற்றும் உற்பத்தியாக இருந்தன. நான் பல்வேறு அமர்வுகளில் பங்கேற்றேன், இருதரப்பு சந்திப்புகளில் பங்கேற்றேன் மற்றும் உச்சிமாநாட்டின் ஆலோசனைகளின் ஓரங்களில் பல தலைவர்களையும் சந்தித்தேன். உலகளாவிய நன்மையை மேம்படுத்துவதற்கு முக்கியமான நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

தனது மற்றொரு டுவிட்டர் பதிவில், எனது கருத்துகளின் போது, கோவிட்-19க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் பங்களிப்புகள், ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற பார்வை, சுகாதாரப் பாதுகாப்பில் புதுமைகளை மேம்படுத்துதல், நெகிழ்ச்சியான உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் தேவை மற்றும் மனித மேம்பாட்டிற்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் தொடர்பான அம்சங்களை நான் எடுத்துரைத்தேன் என்று பிரதமர் மோடி அதில் தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை