உலக செய்திகள்

சிங்கப்பூரில் முதியவரை கொன்ற இந்திய வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை..!

சிங்கப்பூரில் முதியவரை கொன்ற இந்திய வாலிபர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் உள்ள ஜாலான் யூனோஸ் என்ற பகுதியில் இருந்து துவாஸ் நகருக்கு கடந்த வருடம் ஏப்ரல் 16-ந் தேதி அன்று ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை இந்தியரான உடையப்பன் (வயது 25) என்பவர் ஓட்டினார். ராஜேந்திரன் (28) என்பவர் அவருக்கு உதவியாக லாரியின் முன்பக்கத்தில் இருந்தார். அப்போது ரோட்டை கடக்க முயன்ற ஒரு சைக்கிளுக்கு வழி விடாமல் லாரியை விட்டு தடுக்க முயன்றனர். இதில் அந்த சைக்கிள் விபத்துக்குள்ளாகி அதனை ஓட்டிய முதியவர் உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கு சிங்கப்பூர் கோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில் அதன் தீர்ப்பு தற்போது வெளியானது. இதில் உடையப்பன் மீது குற்றச்சாட்டு உறுதியான நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதற்கிடையே விபத்து ஏற்பட காரணமாக இருந்த ராஜேந்திரனுக்கும் கடந்த மாதத்தில் 3 மாதம் சிறை தண்டனை விதித்து அந்த நாட்டின் கோர்ட்டு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு