நேபிட்டா,
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நாடுகளில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மியான்மரில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் அங்கு கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் அங்கு புதிதாக 4,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதிலும் குறிப்பாக ஆசியா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா மியான்மரில் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மியான்மரில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளையும் வரும் ஜூலை 23 ஆம் தேதி வரை தற்காலிகமாக மூட அந்நாட்டின் சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.