உலக செய்திகள்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்

ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பானில் இருந்து டெல்லி புறப்பட்டார்.

தினத்தந்தி

ஒசாகா,

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, அமெரிக்கா, பிரான்சு, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்க கடந்த 27 ஆம் தேதி ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி.

ஜப்பான் சென்ற பிரதமர் மோடி, ஒசாகா நகரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார். பின்னர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டில் பங்கேற்றார்.

ஜி 20 மாநாட்டுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், துருக்கி அதிபர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இரு தரப்பு ஆலோசனை நடத்தினர். பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இரு நாள்கள் நடைபெற்ற ஜி 20 மாநாடு நிறைவுற்றதையடுத்து, ஜப்பானின் ஒசாகா நகரில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு