உலக செய்திகள்

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழா மார்ச் 27-ல் நடைபெறும் என அறிவிப்பு

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

திரைத்துறையின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகவும், திரைக்கலைஞர்களுக்கு அளிக்கப்படும் மிகப்பெரிய கவுரவமாகவும் ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த விருதுகளை வழங்கும் விழாவானது, அமெரிக்காவில் மிக பிரம்மாண்டமாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக இரண்டு மாதங்கள் தாமதமாக ஏப்ரல் 25 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டு நடைபெற இருக்கும் 94-வது ஆஸ்கர் விருது விழாவிற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிப்ரவரி மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட விழாவானது, ஒரு மாதம் தாமதமாக மார்ச் 27 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் விழா நடக்கும் என்று ஆஸ்கர் அகாடமி தெரிவித்துள்ளது.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்