உலக செய்திகள்

சிரிய ராணுவ தாக்குதலில் 270 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலி

சிரியாவின் தென்பகுதியில் அமைந்த சுவாய்டா மாகாணத்தில் சிரிய ஆயுத படையினர் நடத்திய தாக்குதலில் 270 ஐ.எஸ். தீவிரவாதிகள் பலியாகி உள்ளனர்.

மாஸ்கோ,

சிரியாவில் டேயீஷ் என்ற ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது ரஷ்யாவால் தடை செய்யப்பட்ட அமைப்பு ஆகும். இந்த நிலையில், தென்பகுதியில் அமைந்த சுவாய்டா மாகாணத்தில் சிரிய ராணுவ படையினர் கடந்த நவம்பரில் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

இதில் 270 ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள், கண்ணிவெடிகள், பீரங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத குவியல்கள் கைப்பற்றப்பட்டன.

அமெரிக்க ராணுவ தளம் அமைந்துள்ள அட் டான்ஃப் என்ற பகுதியில் இருந்து பெரும் அளவிலான தீவிரவாதிகள் இந்த பகுதிக்கு வந்துள்ளனர். இத்தகவலை சிரியாவில் உள்ள ரஷ்ய படைகளுக்கான செய்தி தொடர்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு