உலக செய்திகள்

புதிய வகை கொரோனா; ஆக்ஸ்போர்டு, பைசர் தடுப்பூசி 80 % செயல் திறன் கொண்டது-ஆய்வில் தகவல்

இந்தியாவில் கண்டறியப்பட்ட பி1.617.2 -உருமாறிய கொரோனாவுக்கு எதிராக பைசர், ஆக்ஸ்போர்டு தடுப்பூசிகள் செயல் திறன் மிக்கவை என ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினத்தந்தி

லண்டன்,

இந்தியாவில் காணப்படும் புதிய வகை பி1.617.2 கொரோனாவுக்கு எதிராக ஆக்ஸ்போர்டு/ அஸ்ட்ரா செனகா மற்றும் பைசர் தடுப்பூசிகள் 80-சதவீதத்திற்கும் மேல் செயல் திறன் கொண்டதாக உள்ளது என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அஸ்ட்ரா செனகா நிறுவனத்தின் தடுப்பூசி இந்தியாவில் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கோவிஷீல்டு என்ற பெயரில் சந்தையில் உள்ள இந்த தடுப்பூசியின் இரண்டு டோஸ்களும் போட்டுக்கொண்ட பிறகு செயல் திறன் 80-சதவீதத்திற்கும் மேல் உள்ளது என இங்கிலாந்து ஆய்வு முடிவுகள் கூறியுள்ளன.

இங்கிலாந்திலும் பி1.617.2 புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டு இருப்பதால், அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்