உலக செய்திகள்

தென்னாப்பிரிக்காவில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனோ தடுப்பூசி நிறுத்தி வைப்பு

போதிய பலனளிக்காததால் ஆகஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனோ தடுப்பூசி தென்னாப்பிரிக்காவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கேப் டவுன்,

அமெரிக்காவின் பைசர் கொரோனா தடுப்பூசியை தொடர்ந்து, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனேகா நிறுவனமும் இணைந்து தயாரித்த தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிறுவனத்தின் மருந்தை இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா கோவிஷீல்டு என்ற பெயரில் தயாரிக்கிறது. இந்த நிறுவனம்தான் தென்ஆப்பிரிக்காவுக்கு 10 லட்சம் டோஸ்கள் வழங்கியது.

இந்த நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழத்தின் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதை தென்னாப்பிரிக்கா தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. லேசான கொரோனா பாதிப்பு மற்றும் உருமாறிய கொரோனாவுக்கு எதிராக போதிய பலன் அளிக்காததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடர்வதற்கான சிறந்த வழி குறித்து விஞ்ஞானிகள் குழு ஆலோசனை வழங்கும் வரை இந்த தடை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை