உலக செய்திகள்

முதல் மாதவிடாய் சுழற்சி: சிறுமிக்கும்- கடத்தியவருக்குமான திருமணம் செல்லும்- பாகிஸ்தான் கோர்ட்

முதல் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருந்தால், அந்த சிறுமியின் திருமணம் செல்லுபடியாகும் என்று பாகிஸ்தானின் சிந்து ஐகோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

கராச்சி:

பாகிஸ்தானில் சிறுபான்மையினர்களாக இருக்கும் இந்து மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த இளம் பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்து, முஸ்லிம் ஆண்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும், 12 முதல் 28 வயதுக்குட்பட்ட சுமார் 1,000 இந்து பெண்கள் கடத்தப்பட்டு, வலுக்கட்டாயமாக திருமணம் செய்து மதமாற்றம் செய்யப்படுகிறார்கள் என்று அமெரிக்காவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று தெரிவித்துள்ளது.

அதிலும் சமீபகாலமாக இந்த கட்டாய மதமாற்றம் மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்து மக்கள் அதிகம் வாழும் சிந்து மாகாணத்தில் இருந்து தொடர்ச்சியாக இந்து இளம் பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

பாகிஸ்தானைச் சேர்ந்த 14 வயது கிறிஸ்தவ சிறுமி ஹூமா. இவர் கடந்த அக்டோபர் மாதம் கடத்தப்பட்டு வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டார் பின்னர் சிறுமியை கடத்திய அப்துல் ஜப்பார் என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் யூனிஸ் மற்றும் நாகீனா மாசிஹ் ஆகியோர் தங்கள் மகளை பார்க்க அவர்கள் சிந்து ஐகோர்ட்டை நாடினர். நீதிமன்றம், பிப்ரவரி 3 ம் தேதி ஒரு விசாரணையில், அவரது வயதை உறுதிப்படுத்த சோதனைகளை மேற்பார்வையிட காவல்துறைக்கு உத்தரவிட்டது.

முதல் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருந்தால், ஷரியா சட்டத்தின்படி அந்த சிறுமியின் திருமணம் செல்லுபடியாகும் என்று சிந்து ஐகோர்ட் தீர்ப்பளித்து உள்ளது.

இந்த வார தொடக்கத்தில், ஷரியா சட்டத்தின்படி, ஹுமா என்ற சிறுமி வயது குறைந்தவள் எனக் கண்டறியப்பட்டாலும், அவருக்கும் அவளைக் கடத்தியதாகக் கூறப்படும் ஜாபருக்கும் இடையிலான திருமணம் அவள் ஏற்கனவே தனது முதல் மாதவிடாய் சுழற்சியைக் கொண்டிருந்தார் என தெரிவித்தனர்.

இது குறித்து பெற்றோர்களின் வழக்கறிஞர் தபஸம் யூசுப் கூறியதாவது:-

இந்து மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தினரின் கட்டாய திருமணங்களைத் தடுக்கும் 18 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளின் திருமணங்களை சட்டவிரோதமாக்கிய 2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட சிந்து குழந்தை திருமண தடைச் சட்டத்தின்படி இந்த தீர்ப்பு இல்லை .

காவல்துறை விசாரணை அதிகாரி அப்துல் ஜபார் குடும்பத்தினரை ஆதரிப்பதாக சிறுமியின் பெற்றோர் நம்பினர். ஹுமாவின் வயதிற்கான சோதனை முடிவுகள் பொய்யானவை என்றும் அவர் தனது கணவருடன் அனுப்பப்படலாம் என்றும் அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று கூறினார்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...