உலக செய்திகள்

இந்திய ஜனாதிபதியின் விமானம் தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதி இல்லை : பாகிஸ்தான்

இந்திய ஜனாதிபதியின் விமானம் தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதி இல்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 9 ஆம் தேதி ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக பாகிஸ்தான் வான்வழியாக செல்ல அந்நாட்டிடம் இந்திய வெளியுறவுத்துறை அனுமதி கோரியது. ஆனால், தங்கள் நாட்டு வான்பரப்பில் இந்திய ஜனாதிபதி செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நடத்தையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி முகம்மது குரோஷி தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. இதற்கு, பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது கவனிக்கத்தக்கது.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்