உலக செய்திகள்

பாகிஸ்தான்: தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் பலி

தற்கொலைப்படை தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்தனர்.

லாகூர்,

பாகிஸ்தானில் இன்று நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 11 பேர் உயிரிழந்தனர்.

.

பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துவா மாகாணம் டிரா இஸ்மாயில் கான் மாவட்டம் டராடிண்ட்ரா பகுதியில் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது.

11 பேர் பலி

இந்த சோதனைச்சாவடியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வாகனம் இன்று வேகமாக வந்து மோதியது. இதையடுத்து, வாகனம் வெடித்து சிதறியதில் சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தெஹ்ரீக் இ தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது

SCROLL FOR NEXT