உலக செய்திகள்

பாகிஸ்தான் - ஆப்கன் மோதலை தீர்ப்பது எளிது: டிரம்ப் சொல்கிறார்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட எட்டு உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன் என்று டிரம்ப் கூறினார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

 கடந்த ஒரு வாரமாக, பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே மோதல் நடைபெற்று வருகிறது. எல்லையில் இரு நாட்டு படைகளும் கடுமையாக மோதிக்கொண்டன. தற்போது சண்டை நிறுத்தம் அமலாகியுள்ளது. அனாலும் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்துவதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் மோதலை தீர்த்து வைப்பது தனக்கு எளிது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறியிருப்பதாவது -

  ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இந்த இரு நாடுகளுக்கு  இடையிலான பிரச்னையை தீர்ப்பது எனக்கு எளிது. இந்தியா-பாகிஸ்தான் மோதல் உட்பட 8 உலகளாவிய போர்களை தீர்த்துவிட்டேன். நான் ஒவ்வொரு முறையும் ஒரு பிரச்னையைத் தீர்க்கும்போது, அடுத்ததைத் தீர்த்தால், உங்களுக்கு நோபல் பரிசு கிடைக்கும்' என்று சொல்கிறார்கள்.  ஆனால், எனக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. யாரோ ஒருவர் அதைப் பெற்றார். இருந்தாலும் எனக்கு  கவலையில்லை. எனக்கு உயிர்களைக் காப்பாற்றுவதுதான் முக்கியம் என்றார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்