உலக செய்திகள்

முதல்முறையாக பாகிஸ்தான் விமானப்படையில் ஒரு ‘இந்து’ விமானியாக தேர்வு

முதல்முறையாக பாகிஸ்தான் விமானப்படையில் ஒரு ‘இந்து’ விமானியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

லாகூர்,

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பெரிய மாவட்டமானது தர்பார்கர், இது இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த இந்து இளைஞரான ராகுல் தேவ், தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் விமானப்படையின் விமானியாவது இதுவே முதல் முறையாகும்.

இது தொடர்பாக அனைத்து பாகிஸ்தானிய இந்து பஞ்சாயத்து செயலாளர் ரவி தவானி கூறுகையில், ராகுல் தேவின் நியமனம் எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் பலரும் ராணுவம், மருத்துவம், குடிமைப்பணி உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பாகிஸ்தான் அரசாங்கம் இது போன்று சிறுபான்மையினர் மீது கவனம் செலுத்தத்தொடங்கினால் வரும் நாட்களில் பல ராகுல் தேவ்கள் நாட்டுக்காக சேவை புரிய தொடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து