உலக செய்திகள்

அதிகாரபூர்வ மொழியாக சீனாவின் மாண்டரின் மொழியை பாகிஸ்தான் அங்கீகரித்தது

பாகிஸ்தானின் ஆட்சி மொழியாக மாண்டரினை அறிவிப்பதற்கு பாகிஸ்தானிய செனட் ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து நேற்று அனுமதி வழங்கி உள்ளது. #MandarinChinese

தினத்தந்தி

இஸ்லாமாபாத்

சீனாவில் 70 சதவீத மக்கள் மாண்டிரின் மொழியை பேசுகின்றனர். சீனா பாகிஸ்தானுக்கு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. சமீபத்தில் சீனா மற்றும் பாகிஸ்தானின் உறவு மேலும் வலுவடைந்து உள்ளது. இதற்கு உதாரணமாக மாண்டரின் மொழி அதிகாரபூர்வ மொழியாக பாகிஸ்தான் அங்கீகரித்து உள்ளது.

பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளைப் பொறுத்த வரையில் இந்த நடவடிக்கை தேவை என்று அதில் கூறப்பட்டு உள்ளது. இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங் இடையில் உள்ள உறவு மேலும் ஆழப்படுத்த மாண்டரின் தெற்காசிய நாட்டின் ஆட்சி மொழியாக இருந்தால் சீனா பாகிஸ்தான் பெருளாதாரத்தில் இணைய, எளிதாக தெடர்பு உதவி புரியும் என கூறப்பட்டு உள்ளது.

இது குறித்து பாகிஸ்தானின் முன்னாள் தூதர் ஹுசைன் ஹக்கானி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-

"70 ஆண்டுகள் இந்த ஒரு குறுகிய காலத்தில், சொந்த மொழிகளை புறக்கணித்து நாட்டில் அதிக மக்களின் தாய் மொழியாக இல்லாத ஆங்கில மொழி, உருது, அரபிக் மற்றும் இப்போது சீன மொழி - ஆகிய நான்கு மொழிகளுக்கு ஊக்கமளிப்பதில் பாகிஸ்தான் மிகுந்த ஆர்வம் காட்டி உள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பரவலாக அதிகம் பேசப்படும் பஞ்சாபி மொழி பாஷ்டோ மற்றும் பல பிற மொழிகளும் நாட்டின் உத்தியோகபூர்வ மொழிகளாக அறிவிக்கப்படவில்லை என கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் டான் செய்தி ஊடகம் வெளியிட்டு உள்ள தகவலில் பாகிஸ்தானியர்கள் சீன மொழியை கற்றுகொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். ஏனெனில் மாறிவரும் மாற்றங்கள் மற்றும் மாண்டரின் மொழி அறிதல் பாகிஸ்தானிலும் சீனாவிலும் அதிக வேலை வாய்ப்பைக் குறிக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் என கூறி உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து