உலக செய்திகள்

பாகிஸ்தான்: ராணுவ பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்து - 2 பேர் பலி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லாகூர்,

பாகிஸ்தானில் ராணுவ பயிற்சி விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமில் சிறிய ரக ராணுவ விமானம் இன்று மதியம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அந்த விமானத்தில் விமானி, துணை விமானி என ராணுவ வீரர்கள் 2 பேர் பயணித்தனர்.

விமான விபத்து - 2 பேர் பலி

இந்நிலையில், பலூசிஸ்தானின் குவாட்டா நகரின் நவன் கில்லி பகுதியில் சென்றபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ராணுவ விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் விமானம் தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் பயணித்த 2 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் உயிரிழந்த 2 ராணுவ வீரர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேவேளை, இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT