உலக செய்திகள்

பாகிஸ்தான்: 12 இந்திய தூதரக அதிகாரிகள் - குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று

இந்திய தூதரக அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று தனிமைபடுத்தப்பட்டு உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்

12 இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய குழு சனிக்கிழமை (மே 22) வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு சென்றது. அவர்களுக்கு பாகிஸ்தானில் கொரோனா பரிசோதனை செய்யபட்டதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதை தொடர்ந்து அவர்களும் அவர்களது குடும்பத்தினரும் தனிமைபடுத்தப்ப்ட்டு உள்ளனர்.

இதனை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ஜாஹித் ஹபீஸ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

தொற்றுநோய்க்கான பாகிஸ்தானின் உயர்மட்ட அமைப்பு, மற்றும் கட்டுப்பாட்டு மையம் (என்.சி.ஓ.சி) 12 அதிகாரிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு அறிவுறுத்தியது. தொற்று நோய் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு இந்திய தூதரக் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு