உலக செய்திகள்

பாகிஸ்தான்: போலீஸ் சோதனை சாவடி மீது கொள்ளை கும்பல் தாக்குதல்; போலீசார் 2 பேர் கடத்தல்

பாகிஸ்தான் நாட்டில் போலீஸ் சோதனை சாவடியை தாக்கி, போலீசார் 2 பேரை கொள்ளை கும்பல் கடத்தி சென்றுள்ளது.

தினத்தந்தி

சிந்த்,

பாகிஸ்தான் நாட்டின் துர்ரானி மெஹர் நகரில் கட்சா பகுதியில் கொள்ளை கும்பலின் அட்டகாசம் தொடர்ந்து வருகிறது. இதனால், அவர்களை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் பயன்படுத்த கூடிய ஆயுதங்களை வாங்க கோரிக்கை விடப்பட்டது.

இதற்காக ரூ.279 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய போலீசார் தரப்பில் ஒப்புதல் கோரப்பட்டது. இந்த மாத தொடக்கத்தில், சிந்த் போலீசாரின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்கீடு செய்ய சிந்த் பகுதிக்கான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், கொள்ளை கும்பலை சேர்ந்த 13 வயதுடைய வஜீத் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். இதேபோன்று, கட்சா பகுதியில் கொள்ளை கும்பலை கட்டுப்படுத்த சோதனை சாவடி ஒன்றை போலீசார் அமைத்து இருந்தனர்.

இதனை அறிந்த கொள்ளை கும்பல் திடீரென சோதனை சாவடி மீது நேற்று தாக்குதல் நடத்தி, போலீசார் 2 பேரை அதிரடியாக கடத்தி சென்றுள்ளது. போலீசார், சஜ்ஜத் ஜக்ரானி மற்றும் கப்பார் என அடையாளம் காணப்பட்டு உள்ளது.

இதன்பின்னர், தங்களது கட்டுப்பாட்டின் கீழ் போலீசார் 2 பேர் இருப்பது போன்ற வீடியோ ஒன்றை கொள்ளை கும்பல் வெளியிட்டு உள்ளது. சிறுவன் வஜீத் விடுவிக்கப்பட வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்