உலக செய்திகள்

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாகிஸ்தான், பயங்கரவாதத்தை தூண்டுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாக சாடியது.

தினத்தந்தி

நியூயார்க்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை, சர்வதேச பிரச்சினையாக்க முயன்று தோல்வி அடைந்த பாகிஸ்தான், கடும் விரக்தியில் உள்ளது. ஐநாவில் இவ்விவகாரத்தை தொடர்ந்து எழுப்பி வரும் பாகிஸ்தான், கடந்த 29ந்தேதி பாதுகாப்பு கவுன்சிலிலும் இது தொடர்பாக குற்றம் சாட்டியது.

குறிப்பாக காஷ்மீரின் தற்போதைய நிலவரம், அங்கு பெண்களின் நிலை என பல்வேறு அம்சங்கள் குறித்து பாகிஸ்தான் பிரதிநிதி மலீகா லோதி பேசினார்.

இதற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அமைதி, பாதுகாப்பு மற்றும் பெண்கள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த விவாதத்தில் இந்தியா சார்பில் பேசிய ஐ.நா.வுக்கான நிரந்தரக்குழு செயலாளர் பாலோமி திரிபாதி, பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அந்த நாடு மீது மறைமுகமாக கடுமையாக விமர்சித்தார்.

பயங்கரவாதத்தை தூண்டுவதும், பிற்போக்குத்தனமான பயங்கரவாத சித்தாந்தங்களை போதிப்பதும், மலிவான அரசியல் லாபத்துக்காக பெண்களின் குரலை நசுக்குவதுமே அவர்களின் நடைமுறை ஆகும் என்றார்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்