உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஊழல் தடுப்பு சட்டத்தில் நீதிமன்ற காவல் 30 நாட்களாக நீட்டிப்பு; அவசர சட்டத்துக்கு துணை அதிபர் ஒப்புதல்

பாகிஸ்தானில் ஊழல் தடுப்பு சட்டத்தில் நீதிமன்ற காவல் 30 நாட்களாக நீட்டிப்பு அவசர சட்டத்துக்கு துணை அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தினத்தந்தி

பாகிஸ்தான் நாட்டின் ஊழல் தடுப்பு சட்டத்தில் நள்ளிரவில் சில முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அதிபர் ஆரிப் ஆல்வி தற்போது புனித யாத்திரை சென்றுள்ள நிலையில் துணை அதிபர் சாதிக் சஞ்சரானி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி விசாரணை காலத்தில் சந்தேக நபரை கைது செய்யவும், கோர்ட்டில் ஒப்படைக்கவும் ஊழல் தடுப்பு உச்ச அமைப்பான தேசிய பொறுப்புடமை கோர்ட்டுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது. மேலும் 15 நாட்களாக இருந்த நீதிமன்ற காவல் தற்போது 30 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர் ஊழல் வழக்கு தொடர்பாக தேசிய பொறுப்புடமை கோர்ட்டில் ஆஜரான சிறிது நேரத்துக்கு முன்பு இந்த சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்