ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு நிலவிவருகிறது. பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு இந்திய திரைப்படங்களின் விசிடிக்கள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது.
இதையடுத்து திருட்டு விசிடிக்களை பறிமுதல் செய்ய அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இஸ்லாமாபாத் உட்பட பல நகரங்களில் இந்திய திரைப்படங்களின் விசிடிக்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.