உலக செய்திகள்

காற்று மாசு எதிரொலி;பாகிஸ்தானில் வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடல்!

உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக பாகிஸ்தானின் லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது

லாகூர்,

பாகிஸ்தான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான லாகூரில் அதிகரித்து வரும் காற்று மாசு எதிரொலியாக வரும் திங்கட்கிழமை பள்ளி கல்லூரிகள் மூடப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதனால் அங்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை நாளாக அமையும்.

உலகிலேயே காற்று மாசு அதிகம் உள்ள நகரமாக லாகூர் உள்ளது குறிப்பிடத்தக்கது

காற்றின் தரக் குறியீடு எண் 348ஆக கடந்த வாரம் பதிவாகி இருந்த நிலையில், இன்னும் மோசமான் நிலைமைக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் வேகமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

அங்கு நிகழும் கடுங்குளிர், எரிபொருள் வாயுக்கள் மற்றும் விவசாய பொருட்கள் கழிவுகள் எரிப்பு போன்றவை காற்று மாசு அதிகரிக்க காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்று மாசு எதிரொலியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், அதே நடைமுறையை பாகிஸ்தான் அரசும் கையாண்டுள்ளது.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்