உலக செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்தை திரும்ப பெறக்கோரி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை திரும்ப பெறக்கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

ஆண்டுதோறும் பிப்ரவரி 5-ந் தேதி, காஷ்மீர் ஆதரவு தினமாக பாகிஸ்தானில் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை இந்தியா திரும்பப்பெற வேண்டும். காஷ்மீரில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை பார்வையிட சர்வதேச அமைப்புகளை அனுமதிக்க வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தனது தீர்மானங்கள் அடிப்படையில், காஷ்மீர் பிரச்சினைக்கு அமைதி தீர்வை நடைமுறைப்படுத்த வேண்டும். பா.ஜனதா அரசின் போர் மிரட்டலை முறியடிப்போம். காஷ்மீர் மக்களுக்கு தார்மிக, அரசியல் ஆதரவு அளிப்போம் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம், ஒருமனதாக நிறைவேறியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு