இஸ்லமாபாத்,
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார். சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்திக்கொண்ட சில நாட்களில் இம்ரான்கானுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இம்ரான்கான் மனைவிக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து இம்ரான்கான் தனிமைப்படுத்திக் கொண்டு, தனது பணிகளை கவனித்து வந்தார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து இம்ரான்கான் முழுமையாக குணம் அடைந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவராக அறியப்படும் செனடர் பைசல் ஜாவீத் கான் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி படிப்படியாக தனது பணிகளை இம்ரான்கான் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.