உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம்: சவுதி பட்டத்து இளவரசருடன் இம்ரான் கான் தொலைபேசியில் பேச்சு

சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுடன் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் பேசினார்.

இஸ்லமாபாத்,

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இப்பிரச்சினையை சர்வதேச அளவில் எடுத்துச்செல்ல முயன்று தோற்றுப்போனது. இருப்பினும், தொடர்ந்து, தனது நட்பு நாடான சீனா உள்ளிட்ட நாடுகளிடம் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது.

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரம் குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இம்ரான் கான் தொலைபேசியில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தொலைக்காட்சி இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த நடவடிக்கை குறித்து சவுதி இளவரசர் முகமது பின் சல்மானிடம் இன்று தொலைபேசியில் பேசி இருக்கிறார். காஷ்மீர் தொடர்பாக சவுதி இளவரசர் முகமது சல்மானிடம் இம்ரான்கான் தொலைபேசியில் பேசி இருப்பது இது நான்காவது முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...