உலக செய்திகள்

பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது: இம்ரான் கான் சொல்கிறார்

பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தாது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லமாபாத்,

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச மன்றங்களில் எழுப்ப முயன்ற பாகிஸ்தான், அங்கு கிடைத்த தோல்வியால் கடும் விரக்தியில் உள்ளது. இதனால், காஷ்மீரில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதை பாகிஸ்தானில் உள்ள அரசியல் தலைவர்கள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், லாகூரில் சீக்கியர்கள் மத்தியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:- நாம் இருவரும் (இந்தியாவும் பாகிஸ்தானும்) அணு ஆயுத பலம் கொண்ட நாடுகள். தற்போது உள்ள பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில், உலகத்திற்கு அது அச்சுறுத்தலாக அமையும். எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் முதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்த மாட்டோம் என்று தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பேசுகையில், அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் சூழலுக்கு ஏற்ப மாறுபடக்கூடும் என்று பேசியிருந்தார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு