இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் ரெயில்வே மந்திரி ஷேக் ரஷித் அகமதுவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவரது அலுவலகம் தெரிவித்தது. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
நவாஸ் ஷெரீப் கட்சியின் துணைத்தலைவரும், முன்னாள் பிரதமருமான ஷாகித் காகன் அப்பாசிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரும் தன் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். இத்தகவலை அவரது கட்சியின் செய்தித்தொடர்பாளர் மரியம் அவுரங்கசீப் உறுதிப்படுத்தினார்.
இதுபோல், மாகாண முன்னாள் மந்திரி ஷார்ஜீல் மேமன், இம்ரான்கான் கட்சியின் பஞ்சாப் மாகாண எம்.எல்.ஏ. சவுத்ரி அலி அக்தர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.