இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் நாட்டில் வருகிற ஜூலை 25ந் தேதி பொது தோதல் நடைபெறும் என்று அந்நாட்டு தோதல் ஆணையம் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போதைய பிரதமா அப்பாஸி தலைமையிலான அரசின் ஆட்சி காலம் வருகிற 31ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் அந்நாட்டில் பொதுத்தோதல் நடத்துவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
மேலும் அந்நாட்டு சட்டபடி ஒரு ஆட்சி காலம் முடிவடைந்த 60 நாட்களுக்குள் அடுத்த தோதல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். இந்நிலையில் ஆணையம் ஜூலை 25 முதல் 27ந்தேதிக்குள் தோதல் நடத்தலாம் என்று அந்நாட்டு அதிபா மம்னூன் ஹூசைனுக்கு இந்த வார தொடக்கத்தில் பரிந்துரை செய்திருந்தது.
அதன் அடிப்படையில் வருகிற ஜூலை 25ந்தேதி பொதுத்தோதலை நடத்த அதிபா சம்மதம் தொவித்துள்ளா. மேலும் பாகிஸ்தானின் சிந்து, கையாபா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களுக்கான அமைச்சரவை பதவிகாலமும் நாளையுடன் முடிவடைகிறது.
இதற்கிடையில், அந்நாட்டின் இடைக்கால பிரதமராக சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தேர்தல் கமிஷனின் இடைக்கால தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
தேர்தலில் முன்னாள் அதிபர் ஆசிப்அலி சர்தாரி (62) பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இத்தகவலை சிந்து மாகாண முதல்-மந்திரி சயீத் முராத் அலி ஷா அளித்த இப்தார் விருந்தின்போது அறிவித்தார்.
இவர் தனது சொந்த தொகுதியான நவாப்ஷாவில் களம் இறங்குகிறார். இதன் மூலம் அவர் 24 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி அரசியலுக்கு வருகிறார்.
இவர் 1987-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோவை மணந்தார். அதைத் தொடர்ந்து கடந்த 1990-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு கராச்சியில் உள்ள லியாரி தொகுதியில் போட்டியிட்டார். 1993-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நவாப்ஷா தொகுதியில் களம் இறங்கினர்.
2007-ம் ஆண்டு பெனாசிர் பூட்டோ படுகொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சியை வழி நடத்தினார்.
2008 பாராளுமன்ற தேர்தலில் கட்சியை வெற்றி பெற செய்தார். அதையடுத்து 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் 11-வது ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்துள்ள அவர் வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்றார்
ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சியும், நீதிக்கட்சியும் ஆளும் கட்சிக்கு சரியாக போட்டி அளிக்கின்றன.