உலக செய்திகள்

பாகிஸ்தானில் நாளை ஜனாதிபதி தேர்தல்: பிடிஐ கட்சி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்பு

பாகிஸ்தானில் நாளை ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. பிடிஐ கட்சி வேட்பாளர் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வருபவர் மம்னூன் ஹூசைன். இவரது பதவிக்காலம் செப்டம்பர் மாதம் 9-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.இதையொட்டி, அடுத்த ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக பாகிஸ்தான் நாட்டின் ஜனாதிபதிக்கான தேர்தல் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறவுள்ளது என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி நாளைய தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் அந்நாட்டு தேர்தல் ஆணையம் செய்து முடித்துள்ளது. அனைத்து மாகாண சபைகளிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி பதவிக்கான போட்டியில், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் ஆரிஃப் அல்வி, பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் சவுத்ரிஅட்சாஸ், ஜமைத் இ உலேமே கட்சி சார்பில் மவுலானா பசல் உர் ரெகுமான் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

எனினும், பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியைசேர்ந்த ஆரிப் அல்வியே வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. கராச்சியை சேர்ந்த அல்வி, பல்மருத்துவம் பயின்றவர் ஆவார். தனது அரசியல் காலத்தில் எப்போதும், இம்ரான்கானுக்கு துணையாக செயல்பட்டார் என்று கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை