இஸ்லாமாபாத்,
துருக்கியிடமிருந்து 1 லட்சம் டிரோன்களை வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தானின் நட்பு நாடாக துருக்கி திகழ்கிறது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆயுத உதவிகளை வழங்கியது. மேலும், சமீபகாலமாக இரு நாடுகளுக்க்கும் இடையே ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், துருக்கியிடமிருந்து 1 லட்சம் டிரோன்களை வாங்க பாகிஸ்தான் ஒப்பந்தம் செய்துள்ளது. துருக்கியின் முன்னணி பாதுகாப்பு நிறுவனமான 'பசிபிக் டெக்னாலஜி' உடன் பாகிஸ்தான் அரசு 3 ஆண்டு கால ராணுவ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 939 கோடி ரூபாய் மதிப்பில் 1 லட்சம் 'மெர்குட் எப்.பி.வி. ரக டிரோன்கள், 10 'அல்பின்' ரக ஆளில்லா ஹெலிகாப்டர்கள், 25 'டும்ருல்' மினி ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை வாங்கப்படப்பட உள்ளது.