உலக செய்திகள்

எங்கள் நாட்டில் மீண்டும் ‘துல்லிய தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும்: பாக். எச்சரிக்கை

எங்கள் நாட்டில் மீண்டும் ‘துல்லிய தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வாஷிங்டன்,

பாகிஸ்தானில் உள்ள அணு ஆயுதங்களின் இருப்பிடத்தை கண்டறிந்து தாக்கவும், அங்கு எல்லை தாண்டி சென்று மீண்டும் துல்லிய தாக்குதல் நடத்தவும் முடியும் என இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா கூறியிருந்தார். இது பாகிஸ்தானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

எனவே இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி கவாஜா ஆசிப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர் கூறுகையில், பாகிஸ்தான் மீது இந்தியா துல்லிய தாக்குதல் நடத்தினாலோ அல்லது அணு ஆயுத தளவாடங்களை தாக்கினாலோ எங்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றார்.

தற்போதைய நிலையில் இந்தியாவுடனான உறவு பின்தங்கி இருப்பதாக கூறிய அவர், இரு நாட்டு உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு இந்தியா பதில் கொடுப்பதில்லை. காஷ்மீர் விவகாரமே இருநாட்டு பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டையாக உள்ளது இவ்வாறு அவர் கூறினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை