உலக செய்திகள்

இறங்கி வருகிறது பாகிஸ்தான் - தூதர் டெல்லி திரும்புகிறார்

பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லி திரும்ப உள்ளார்.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

காஷ்மீர் புலவாமாவில் தாக்குதல் நடைபெற்ற பின்னர் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் பிப்ரவரி மாதம் 18-ந் தேதி இந்தியாவைவிட்டு வெளியேறினார். அவரை பாகிஸ்தான் அரசு ஆலோசனைக்கு அழைத்ததாக கூறப்பட்டது. மறுநாள் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் அஜய் பைசாரியாவையும் இந்திய அரசு ஆலோசனைக்காக அழைத்தது.

இந்நிலையில் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு இருந்தவாறு வருகிற 14-ந் தேதி இருநாட்டு வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பங்கேற்கும் கர்தார்பூர் சாலை பேச்சுவார்த்தை ரத்துசெய்யப்படவில்லை என்பதை இந்தியா உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது முடிவில் இருந்து கீழே இறங்கி, ஆலோசனை முடிந்துவிட்டதால் பாகிஸ்தான் தூதர் சோகைல் மஹ்மூத் டெல்லி திரும்பி தனது பணிகளை கவனிப்பார் என்று கூறியுள்ளது.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்