உலக செய்திகள்

இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பாகிஸ்தான் அவமரியாதை

இந்திய தூதரகம் அளித்த இப்தார் விருந்தில் பங்கேற்ற விருந்தினர்களுக்கு பாகிஸ்தான் அவமரியாதை செய்துள்ளது.

தினத்தந்தி

பாகிஸ்தான் நாட்டில் இஸ்லாமாபாத் நகரில் உள்ள செரீனா ஓட்டலில் இந்திய தூதரகம் சார்பில் ரமலான் நோன்பினை முன்னிட்டு நேற்று இப்தார் விருந்து அளிக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆனால் விருந்து நடந்த ஹோட்டலை பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பினர் முற்றுகையிட்டு அங்கிருந்த விருந்தினர்களை துன்புறுத்தி, அவமரியாதை செய்துள்ளனர். அவர்களில் நூற்றுக்கணக்கானோரை திரும்பி போக செய்துள்ளனர்.

இந்த விருந்து நடைபெறுவதற்கு முன், விருந்தினர்களை தொலைபேசியில் அழைத்து விருந்தில் பங்கேற்க கூடாது என மிரட்டியுள்ளனர். மீறி பங்கேற்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் அச்சுறுத்தியுள்ளனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்