இஸ்லாமாபாத்,
பாகிஸ்தானில் ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்கள் பொதுவெளியில் கசியும் சம்பவம் அவ்வப்போது நிகழ்கிறது. ராணுவ வீரர்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக தகவல்களை கசிய விடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது அந்நாட்டு ராணுவத்தை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியது. இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராணுவ வீரர்கள் பேஸ்புக் டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்த பாகிஸ்தான் ராணுவம் தடைவிதித்துள்ளது. பணியில் இருக்கும் ராணுவ வீரர்கள் மட்டும் இன்றி ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதில் உயர் அதிகாரிகள் உள்பட யாருக்கும் விதிவிலக்கு கிடையாது என்றும், மீறி பயன்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது.