உலக செய்திகள்

உலகில் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பாகிஸ்தானை விட இந்தியா மிகவும் பின்தங்கியது

2018 ஆம் ஆண்டின் உலகின் மகிழ்ச்சியான நாடு எது? என்ற ஆய்வை ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு சில மாதங்களாக நடத்தி வருகிறது.

உலகின் மகிழ்ச்சியான நாடு எது என்பது குறித்து ஆன்லைன் மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு, சமூக விடுதலை, பணப்புழக்கம் ஆகியவகைகளைக் கொண்டே இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியலில் பின்லாந்து நாட்டு மக்கள்தான் அதிக சந்தோஷத்துடன் வாழும் மக்கள் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து நாட்டை அடுத்து, நார்வே, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் முதல் 5 இடங்களைப் பிடித்துள்ளன.

இந்த ஆய்வில் 156 நாடுகள் இடம் பெற்றன. அதில் இந்தியாவுக்கு 133-வது இடமே கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட இதே ஆய்வில் 122 ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. ஆனால், இந்த வருடம் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 11 இடங்கள் பின் தங்கி 133-வது இடத்தைப் பெற்றுள்ளது.

சார்க் நாடுகளில் பாகிஸ்தான் 75-வது இடத்தை பெற்று முன்னணியில் உள்ளது. பூடான் 97 வது இடத்திலும் நேபாளம் 101 வது இடத்திலும், வங்காள தேசம் 115 வது இடத்திலும், இலங்கை 116 வது இடத்திலும் உள்ளன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...