உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 4,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,21,896 ஆக உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 4,551 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,13,623 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

பாகிஸ்தானில் அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 89,225 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 78,956 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 22,941 பேருக்கும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக 13,50,773 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 12-வது இடத்தில் உள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு