உலக செய்திகள்

பாகிஸ்தானில் இன்று மேலும் 2,521 பேருக்கு கொரோனோ பாதிப்பு

பாகிஸ்தானில் இன்று மேலும் 2,521 பேருக்கு கொரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

இஸ்லாமாபாத்,

உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொடூர கொரோனா பாகிஸ்தானிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,521 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் உள்ள கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 2,48,872 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 74 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 5,197 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 1,56,700 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

அங்கு அதிகபட்சமாக சிந்து மாகாணத்தில் 1,03,836 பேருக்கும், பஞ்சாப் மாகாணத்தில் 86,556 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 24,211 பேருக்கும், அதேசமயம் ஒட்டுமொத்தமாக 15,62,638 பேருக்கும் கொரேனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு