உலக செய்திகள்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது. #NawazSharif

தினத்தந்தி

இஸ்லமாபாத்,

வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில், பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பிரபலங்கள் வெளிநாடுகளில் சட்ட விரோத கருப்பு பண பரிமாற்றங்கள் செய்துள்ளனர். பெருமளவில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். ரகசிய வங்கி கணக்குகளில் டெபாசிட்டுகளும் செய்துள்ளனர்.

இது தொடர்பான ரகசிய ஆவணங்களை சர்வதேச புலனாய்வு செய்தியாளர்கள் கூட்டமைப்பு பனாமா லீக்ஸ் என்ற பெயரில் வெளியிட்டு, உலக அரங்கை பரபரப்பாக்கியது. இந்த ஊழல் பனாமா கேட் ஊழல் என அழைக்கப்படுகிறது. 1990-களில் நவாஸ் ஷெரீப் இரு முறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பண பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், லண்டனில் 4 சொகுசு அடுக்கு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் பனாமா ஆவண கசிவில் தகவல் வெளியானது. இதையடுத்து, நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கூட்டு விசாரணைக்குழு அமைத்து நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான பனாமா ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. நவாஸ் ஷெரீப்பின் பிரதமர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதித்து அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்