உலக செய்திகள்

பனாமா கேட் ஊழல் வழக்கு விசாரணைக்காக இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பினார் நவாஸ் ஷெரீப்

பனாமா கேட் ஊழல் வழக்கின் விசாரணைக்காக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்தில் இருந்து பாகிஸ்தானுக்கு இன்று திரும்பினார்.

அதன்பின்னர் கடந்த மாதம் அவர் தனது மனைவியுடன் லண்டன் சென்று விட்டார். பனாமா கேட் ஊழல் தொடர்புடைய இரு ஊழல் வழக்குகளில் ஆஜராகாத நிலையில் அவருக்கு கடந்த அக்டோபர் 26ந்தேதி ஜாமீனுடன் கூடிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அவர் இஸ்லாமாபாத் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளார். அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் அவரை வரவேற்றனர். பின்பு தனது வாகனத்தில் பஞ்சாப் இல்லத்திற்கு புறப்பட்டு சென்றார்.

அவரை ஆதரவாளர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் அங்கு வரவேற்றனர். நீதிமன்ற வழக்குகள், அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சி விவகாரங்கள் ஆகியவை பற்றி அவர் இன்று ஆலோசனை மேற்கொள்வார். வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால் ஷெரீப் சிறையில் அடைக்கப்படுவார்.

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு