உலக செய்திகள்

பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு.!

அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

23 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து காணாமல் போன, 7ம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயில் முருகன் சிலை, அமெரிக்காவில் உள்ள ஹோம் லேண்ட் செக்யூரிட்டி என்ற நிறுவனத்திடம் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

'தடயம்' என்ற பத்திரிகையில் முருகன் சிலை தொடர்பான புகைப்படத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில்,  முருகன் சிலையைத் தமிழ்நாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்  

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது