உலக செய்திகள்

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல்; வாக்குப்பதிவு தொடங்கியது

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

தினத்தந்தி

கொழும்பு,


இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையில் கடந்த, 2015 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடந்தது. பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் முன்பே பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். அதாவது, அதிபர் கோட்டபய ராஜபக்சவால் கடந்த மார்ச் ஒன்றம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கையில் கொரோனா தெற்று பரவல் அதிகரித்ததால், 5 மாதங்களுக்கு பின்னர் பெதுத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கியது. மக்கள் விறுவிறுப்பாக தங்கள் வாக்கினை பதிவு செய்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 166 தொகுதிகளில் இருந்து 196 பேரை பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. ஆகஸ்ட் 6ம் தேதி காலை 8 மணி முதலே வாக்கு எண்ணும் பணி தெடங்கும் என்றும், நள்ளிரவுக்குள் முடிவு தெரிய வரும் என கூறப்படுகிறது.

கெரேனா பரவல் காரணமாக பிரசார கூட்டங்கள், சுகாதார அமைச்சகத்தின் நடைமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பான முறையில் நடைபெற்ற நிலையில், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கைக்கு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. வாக்குச் சாவடியில் உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் கை சுத்தம் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

விரலுக்கு மை பூசும்போதும் சுகாதார விதிமுறை பின்பற்றப்பட உள்ளது என்றும்,ஒருமீட்டர் இடைவெளி கடைபிடிப்பது, முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் வாக்களிப்பு வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும், 28 நாட்கள் தனிமைப்படுத்திக் கெண்டவர்களுக்கு மட்டும் வாக்களிக்க வசதி செய்து தரப்பட்டு உள்ளது. புதன்கிழமை மாலை 4 மணி முதல் 5 மணி வரை வந்து வாக்களிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு