பாலிகேசிரில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடியது. அதனை தொடர்ந்து பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துள்ளானது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணியில் இறங்கினர்.
எனினும் இந்த கோர விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 18 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
முன்னதாக நேற்று முன்தினம் துருக்கியின் மேற்கு மாகாணம் மனிஷாவில் பஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் 9 பேர் பலியானதும் 30 பேர் படுகாயம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.