உலக செய்திகள்

நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை

நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு 5 மணி நேரத்துக்குள் சென்று பயணிகள் விமானம் சாதனை படைத்துள்ளது.

லண்டன்,

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகரம் வரையிலான தூரத்தை கடக்க விமான பயண நேரம் சராசரியாக 6 மணிநேரம் 13 நிமிடங்கள் ஆகும்.

இந்த நிலையில் பிரிட்டிஸ் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 747 ரக பயணிகள் விமானம் இந்த தூரத்தை 5 மணி நேரத்துக்குள்ளாக கடந்து சாதனை படைத்துள்ளது.

இந்த விமானம், நேற்று முன்தினம் காலை நியூயார்க்கில் உள்ள கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4 மணிநேரம் 56 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து லண்டன் விமான நிலையத்திற்கு சென்றடைந்தது.

இதன்மூலம் அட்லான்டி பயண தூர பகுதியை 5 மணிநேரத்துக்குள்ளாக கடந்த முதல் பயணிகள் விமானம் எனும் சாதனையை படைத்தது. முன்னதாக நார்வே விமானம் இந்த பயண தூரத்தை 5 மணிநேரம் 13 நிமிடங்களில் கடந்தது சாதனையாக இருந்தது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...