உலக செய்திகள்

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமான நிலையங்களுக்கு 6 மணி நேரம் முன்னதாக வர வேண்டும் - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவிப்பு

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகள் விமான நிலையங்களுக்கு 6 மணி நேரம் முன்னதாக வர வேண்டும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

தினத்தந்தி

துபாய்,

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் இருந்து அமீரகத்துக்கு வரும் விமான சேவை 3 மாத தடைக்குப் பின்னர் கடந்த 5-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமான சேவையானது தமிழகத்தின் சென்னை, திருச்சி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து இயக்கப்படுகிறது. விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் துபாய், அபுதாபி உள்ளிட்ட விசாவை பொறுத்து சம்பந்தப்பட்ட அரசுத்துறைகளின் அனுமதியை முறையாக பெற்றிருக்க வேண்டும். 48 மணி நேரத்துக்குள் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகள் க்யூ.ஆர். குறியீட்டுடன் வைத்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் விமான நிலையத்தில் விமானம் புறப்படுவதற்கு முன்னர் ரபிட் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட வேண்டும். இந்த பரிசோதனை விமானம் புறப்படுவதற்கு முன்னர் 4 மணி நேரத்தில் தொடங்கப்படும். விமானம் புறப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் பரிசோதனை நிறைவடையும்.

இந்த பரிசோதனை மற்றும் பயணிகள் கொண்டு வரும் ஆவணங்களை சரிபார்க்க வேண்டியிருப்பதால் பொதுமக்கள் விமான நிலையத்துக்கு 6 மணி நேரம் முன்னதாக வர வேண்டும். எனவே காலதாமதத்தை தவிர்க்க இந்த வழிமுறைகளை பின்பற்றி விரைவாக வந்து விமான நிறுவன ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்