உலக செய்திகள்

பெட்ரோல் கையிருப்பு: பாகிஸ்தான் மந்திரி வேதனை

இந்தியாவிடம் 60 முதல் 70 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உபரியாக உள்ளது.

பாகிஸ்தானில் ஒருநாளைக்கு தேவையான பெட்ரோல் கூட உபரியாக இல்லை என்று அந்நாட்டு பெட்ரோலியத்துறை மந்திரி அலி பர்வேஸ் மாலிக் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்தியாவிடம் 60 முதல் 70 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் உபரியாக உள்ளது. ஒரே கையழுத்தில் இதை சந்தைகளுக்கு கொண்டு வந்துவிட முடியும். ஆனால் பாகிஸ்தானில் அப்படி இல்லை ” என்று கவலை தெரிவித்தார்.

மேற்காசிய போரால் பாகிஸ்தானில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே விலை வாசி உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளால் தவித்த பாகிஸ்தானுக்கு ஈரான் - அமெரிக்கா போரால் ஏற்பட்ட கச்சா எண்ணெய் மேலும் தலைவலியை கொடுத்துள்ள நிலையில், இந்தியாவின் பெட்ரோல் கையிருப்பை நினைத்து பொறாமைப்படும் வகையில், மேற்கண்ட கருத்தை பாகிஸ்தான் மந்திரி அலி பர்வேஸ் மாலிக் கூறியுள்ளார்.