உலக செய்திகள்

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் - அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

வாஷிங்டன்,

பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில் வெளியிட்ட தொலைக்காட்சி உரையில், அமெரிக்காவில் அனைவருக்கும் பைசர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். பைசர் தடுப்பூசியை அவசரகால அடிப்படையில் பயன்படுத்த எப்.டி.ஏ அனுமதி அளித்ததற்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்காவில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கொரோனாவுக்கான முதல் தடுப்பூசி செலுத்தப்படும். மூத்த குடிமக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்களப்பணியாளர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அதில் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்