கோப்புப்படம் 
உலக செய்திகள்

பைசர் தடுப்பூசியால் டெல்டா வைரசுக்கு எதிராக 90 சதவீத செயல்திறன்: ஆய்வில் தகவல்

பைசர் தடுப்பூசி, டெல்டா வைரசுக்கு எதிராக 90 சதவீத செயல்திறனை கொண்டிருப்பதாக நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினத்தந்தி

வாஷிங்டன்,

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக அமெரிக்காவில் பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசி, டெல்டா வைரஸ் தொற்றுக்கு எதிராகவும் நன்றாக வேலை செய்கிறது என்பது அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக 2 பைசர் தடுப்பூசிகள் போட்ட பின்னரும் டெல்டா வைரஸ் உள்பட அனைத்து உருமாறிய வைரஸ்கள் பாதித்தாலும்கூட, ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்படுகிற நிலையை குறைந்தது 6 மாதங்களுக்கு தடுக்கிறது. அதுவும் 90 சதவீத செயல்திறனை கொண்டிருக்கிறது. இருந்தாலும் தடுப்பூசிகள் போட்ட ஒரே மாதத்தில் செயல்திறன் 2 சதவீதம் குறைந்து விடும், 6 மாதங்களில் 47 சதவீதமாகி விடும் என்றும் தெரிய வந்துள்ளது.

ஆய்வாளர்களில் ஒருவரான சாரா டர்டாப் இதுபற்றி கூறுகையில், எங்கள் ஆய்வானது கடுமையான நோய்களையும், பெருந்தொற்றுகளையும், ஆஸ்பத்திரிகளில் சேர்க்கைகளையும் தடுப்பதில் தடுப்பூசிகள் முக்கிய கருவிகளாக செயல்படும், டெல்டா உள்பட உருமாறிய வைரஸ்களுக்கும் இது பொருந்தும் என்று காட்டுகின்றன என தெரிவித்தார். இந்த தகவல்கள், தி லேன்செட் பத்திரிகையில் வெளியாகி உள்ளன.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு